இலங்கை மீண்டும் வங்குரோத்து அடையும் – சஜித் பிரேமதாச
இலங்கை மீண்டும் வங்குரோத்து அடையப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஐந்து தசம் ஐந்து பில்லியன் டொலர் கடன் தொகையை மீள செலுத்துவதற்கு போதுமான பொருளாதார வளர்ச்சியை பேண தவறியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனால் 2028 ஆம் ஆண்டு அளவில் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அம்பாறையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு ஊர் தீர்வு திட்டத்தை பெற்றுக் கொள்ளுமாறு தாம் அரசாங்கத்திற்கு முன்மொழிவுகளை வழங்கியதாகவும் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது முன்மொழிவுகளை அரசாங்கம் உதாசீனம் செய்வதாக தென்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசர் சுட்டிக்காட்டியுள்ளார்.





அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri
