நாட்டை மீட்டெடுத்தவர் ரணில் : பாலித ரங்கே பண்டார
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் பொழுது அதனை மீட்டெடுத்தவர் ரணில் விக்ரமசிங்கவே அந்த தருணத்தில் எந்த ஒரு எதிர்க்கட்சி தலைவரும் முன்வரவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில், ஆரியகுளம் நாக விகாரைக்கு இன்று (19.08.203) விஜயம் மேற்கொண்டபோது யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து சமகால அரசியல் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட்டுக்கோட்டை வாழ் மக்களை நான் நம்புகின்றேன். இந்நேரத்தில் எனது கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிகளையும் உங்களுக்கு தெரிவித்து கொள்கின்றேன்.
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனும் நானும் அவரும் ஒன்றாக நாடாளுமன்றம்
சென்றோம். அவர் ஒரு போராளி ஆயுதமின்றி போராட்டம் செய்தவர்.
அவர் வடக்கு பிரச்சினையை மட்டுமல்லாது முழு இலங்கையிலும் ஏற்பட்டும் பிரச்சினையை பற்றி பேசிய ஒருவர். 1948 இந்த ஐக்கிய தேசிய அனைத்து இனத்தவர்களையும் இணைத்தே உருவாக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியற்று போனால் நாடு கீழ்விழும்
வேறுபாடு அற்ற ஒரு கட்சியே எமது கட்சி .டி.எஸ் சேனநாயக்கா இந்த கட்சியை இலங்கையருக்கான கட்சியாகவே உருவாக்கினார்.
ஆகையால் இப்பொழுதும் எமது கட்சி பலமாக உள்ளது. பின்னர் பண்டார நாயக்காவினால் உருவாகாகப்பட்ட கட்சி பௌத்தசிங்கள பேரினாவாதத்தை உருவாக்கியது.
பின்னர் பல முஸ்லிம் தமிழ் கட்சிகளும் உருவாக்கினர். முற்பது வருடங்களாக யுத்தம் நிலவியது.ஜேவிபியும் யுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவு நாம் எமது நாட்டின் எதிர்காலம் படு பாதாளத்திற்குள் போனது.
பொதுமக்கள் அல்லல் பட்டார்கள் அரசியல் வாதிகள் குதூகலமாய் இருந்தார்கள்.எப்பொழுதெல்லாம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியற்று போகிறதோ அப்பொழுதெல்லாம் நாடு கீழேவிழுந்தது.
நாடு கீழேவிழுந்த போதெல்லாம் அதனை தூக்கி விட்டது ஐக்கிய தேசிய கட்சியே சிறிமாவோ பண்டாரநாயக்க மகிந்த, கோட்டா என நாடுகள் பாதாளத்தினுள் தள்ளபட்டப்பொழுதெல்லாம் அதனை மீட்டெடுத்தது ஐக்கிய தேசிய கட்சியாகும்.
நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தளள்பட்ட பொழுது எதிர்கட்சியை பொறுப்பேற்கசொல்லும் பொழுது டலஸ் அழகபெரும ,அனுரகுமார,சஜித் என அனைவரும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தப்பித்தார்கள்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே காணப்பட்டார்.அவரே நாட்டை மீட்டெடுத்தார் 2019 ஆம் ஆண்டு அரசியல் மாற்றத்தில் சஜித் முறையான முடிவை எடுத்திருந்தால் நாடு பொருளாதார நெருக்கடிக்கு சென்றிருக்காது.சஜித் தனது தகப்பன் பிரேமதாசவின் உரோமத்திற்கு கூட பொருந்தாததவர்.
தற்பொழுது இந்த நாட்டின் ஜனாதிபதியின் இலக்கு 2048இற்கு முன்னர் நாட்டினை தன்னிறைவான நாடாக மாற்றுவது ஏன் 2048 என கேட்கலாம் இவர் ஒரு இலக்கை கொடுத்திருக்கிறார் தன்னிறைவு பெற்ற நாடாக அதற்கு முன் மாறும் என்று அதனால் தான் மக்கள் சரியான தீர்மானம் எடுக்கவேண்டும் என கோருகின்றோம்.
ஒரு நாட்டு மக்களாய் செயற்பட வேண்டும் வடக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் எமது அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரன் மூலம் வளர்தெடுக்க தீர்மானித்துள்ளோம்.எமதுநாடு ஒரு நல்நிலைக்கு வரவேண்டும்.அதுவே எமது கட்சியின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 5 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
