நாட்டை கூட்டுப்பொறுப்பாலேயே கட்டியெழுப்ப முடியும்: சிதம்பரநாதன் உதயகுமார் (Video)
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூட்டுப் பொறுப்பு முக்கியம் என யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிதம்பரநாதன் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடி நிலைமையைச் சந்தித்துள்ள நிலையில் எதிர்வரும் மாதங்களில் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திப்பதற்கான எதிர்வு கூறல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இலங்கையில் திட்டமிடாமல் நடைபெற்ற பகுதிகளில் மற்றும் வெளிநாட்டு அதிகளவு கடன் காரணமாக இன்று பாரிய பொருளாதார சூழ்நிலையை இறங்கு முகம் கொடுத்து வருகிறது.
உதாரணமாக சொல்லவேண்டுமானால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் கடன் கேட்க வேண்டுமானால் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார்கள்.
ஆனால் சீனாவிடம்
நிபந்தனை இல்லாமல் கடன்களை வேண்டியது எனவே தற்போது நாடு பாரிய பொருளாதார
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.



