சர்வதேச நாணய நிதியத்திடம் பிணையெடுப்பு கோரும் நாடுகள்
கோவிட் தொற்றுநோய் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரினால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் பிணையெடுப்பு கோரியுள்ளன.
கடன் பாதிப்புக்கள்
இந்த நிலையில் உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் அதிகரித்து வரும் கடன் பாதிப்புகளை சுட்டிக்காட்டியுள்ள இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி 20 நாடுகளின் பலதரப்பு ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூரில் நடந்த கூட்டம்
ஜி 20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோர் நேற்று (24.02.2023) பெங்களூரில் நடத்திய கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு இந்த அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.