வீட்டு திட்டத்தை ஆரம்பித்து ஊழல் மோசடி: விசாரணை முன்னெடுப்பு - தேசிய மக்கள் சக்தி நா.உ. கந்தசாமி பிரபு
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது, தான் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு சமட்டசமன எனும் வீட்டு திட்டத்தை ஆரம்பித்து இடைநடுவில் கைவிடப்பட்டதுடன் கல்வெட்டுக்களில் பெயர் பொறிப்பதற்கு 2 கோடிகளுக்கு மேல் செலவு செய்து இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக ஆணைக்குழு ஒன்றை நியமித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
வீடுகள் கையளிப்பு
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள திமிலைதீவு உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஒரு மில்லியன் ரூபா நிதியுதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) மக்களிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் சஜித் பிரேமதாசவால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டு திட்டங்கள் அத்திவாரம் இடப்பட்டு கைவிடப்பட்டிருந்தது.
இடைநடுவில் கைவிடப்பட்ட திட்டம்
அந்த வீடுகள் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமலே அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துக்காகவே ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டது.

2015 மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 வீட்டு தொகுதிகள் அமைக்க என ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட இந்த வீட்டு திட்டம் 10 வருடங்களுக்கு பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவிடப்பட்டிருக்கும் வீட்டு தொகுதிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து புனர்நிர்மாணம் செய்து முடிவடையும் நிலையில் உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri