கழிவறைகளையும் விட்டு வைக்காத ஊழல் பேர்வழிகள்
இலங்கையின் தென் பகுதியில் கழிவறைகள் இல்லாத குடும்பங்களுக்கு கழிவறைகளை நிர்மாணித்துக்கொடுக்க ஒதுக்கப்பட்ட பெருந்தொகையான பணத்திற்கு என்ன நடந்த என்பது தெரியவில்லை என தென் மாகாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் மாகாணத்தில் கழிவறை வசதிகள் இல்லாத 493 குடும்பங்களுக்கு அந்த வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 9 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் 9 மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டு ஒரு கழிவறை மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய கணக்காய்வு செயலகம் 2020 ஆம் ஆண்டுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
கழிவறை வசதிகள் இல்லாத 493 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 246 பேருக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை 2020 ஆம் ஆண்டு 206 குடும்பங்களுக்காக கழிவறைகளை நிர்மாணிக்க 17 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ள போதிலும் 27 கழிவறைகள் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
