புல்மோட்டையில் சடலமாக மீட்கப்பட்டவரின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ள குடும்பத்தினர்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் 10.06.21 அன்று பச்சைப்புல்மோட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மரண விசாரணை அதிகாரிகள்,தடயவியல் பொலிஸார் ஆகியோர் சடலத்தினை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், இவரின் உயிரிழப்பு தொடர்பில் மன்றிற்கு அறிக்கையிடுமாறும் பணித்துள்ளார்.
குறித்த நபர் நந்திக்கடலுக்கு செல்லும் வீதியினை விட்டு பற்றை ஒன்றிற்கு அருகிலேயே சடலமாக காணப்பட்டுள்ளார் இவரது மரணம் தொடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன், மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் உயிரிழந்தவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.









வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
