தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி புதைக்கப்பட்ட சடலம்! மனைவியும், மகளும் கோவிட் தொற்றால் மரணம்

Srilanka Covid Death Puttalam
By Rakesh Sep 10, 2021 04:19 PM GMT
Report

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி புத்தளம் வெப்பமடுவ பொதுமயானத்தில் புதைக்கப்பட்ட 56 வயது நபரின் சடலம், புத்தளம் நீதவான் முன்னிலையில் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

மூன்று பிள்ளைகளின் தந்தையின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டது.

குறித்த நபர் கடந்த 4ஆம் திகதி அவரது வீட்டில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி அன்னைறய தினமே வெப்பமடுவ பொதுமயானத்தில் புதைக்கப்பட்டது.

குறித்த நபர் மரணமடைந்த இரண்டு தினங்களின் பின்னர், அவரது மகள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது மனைவியும் உடல்நலக் குறைபாடு காரணமாக வீட்டில் மரணமடைந்த நிலையில், அவரது சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டது.

குறித்த இருவரும் கோவிட் வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தமை பி.சி.ஆர். பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

எனவே, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸாருக்கு அறிவிக்காது புதைக்கப்பட்ட நபர் கோவிட் தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் நிலவுகின்றது எனப் புத்தளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டையடுத்து புத்தளம் பொலிஸார் இவ்விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றதுடன், சடலத்தை மீண்டும் தோண்டி எடுப்பதற்கும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரினர்.

இதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியதையடுத்து, புத்தளம் நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில் சடலம் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

மிகவும் இரகசியமான முறையில் குறித்த நபரின் இறுதிக்கிரியையில் பங்கேற்ற 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.


Gallery
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US