கிண்ணியாவில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா
கிண்ணியா - காக்கா முனைப்பகுதியில் 9 மாத குழந்தையொன்று உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை குறிஞ்சாங்கேணி காதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
திருகோணமலை நீதிமன்றத்தில் கடமையாற்றி வரும் நபர் ஒருவரின் குடும்பத்தினருக்கு இன்று பெறப்பட்ட அன்டிஜென் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கிண்ணியா பிரதேசத்தில் தொடர்ச்சியாக மக்களை தெளிவூட்டி வருவதுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம். எம். அஜித் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு சங்கங்களின் ஊடாகவும் தமது கிராமங்களை பாதுகாப்பது குறித்து அறிவுறுத்தல்களையும், அறிவூட்டல்களையும் வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.