கோவிட் அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
கோவிட் அறிகுறிகள் தென்பட்டால் உடன் பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
நீண்ட விடுமுறையைக் கொண்ட கடந்த வாரத்தில் பலர் வெளியிடங்களுக்கு சென்று திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நோய் அறிகுறி தென்படும் அனைவரும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகளவில் மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு விடுமுறை நாட்களில் பலரும் சென்றிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலைமைகளில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நெருங்கிய ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் தொடர்புடையவர்களும் பரிசோதனை செய்து கொள்வதே பொருத்தமானது என அறிவுறுத்தியுள்ளார்.
