பிரித்தானியாவின் கொரோனா நிலவரம்! ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பு மருந்து குறித்து வெளியான அறிவிப்பு
ஒற்றை டோஸ் தடுப்பூசி கொரோனாவிற்கு எதிராக 66 வீதம் பயனுள்ளதாக இருப்பதை நிரூபித்துள்ளது. அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிப்பது மற்றும் இறப்பிலிருந்து பாதுகாக்கிறது.
பெல்ஜிய மருந்து நிறுவனமான ஜோன்சன் தயாரித்துள்ள தடுப்பூசி, தென்னாப்பிரிக்காவில் பரவும் புதிய மாறுபாட்டிற்கு எதிராக குறைவான செயல்திறன் அறிகுறிகளை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஜோன்சன் அண்ட் ஜோன்சனுக்கு சொந்தமான ஜோன்சன், இரண்டு அளவுகளை வழங்குவது வலுவான அல்லது நீண்ட கால பாதுகாப்பை அளிக்குமா என்பது குறித்து ஆய்வு செய்கின்றது.
இந்நிலையில், பிரித்தானியா 30 மில்லியன் டோஸையும், அமெரிக்கா 100 மில்லியன் டோஸையும், கனடா 38 மில்லியன் டோஸையும் முன்பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் (எம்.எச்.ஆர்.ஏ) இந்த தடுப்பு மருந்தை அங்கீகரித்தால், அது நாட்டின் தடுப்பூசி திட்டத்தை "கணிசமாக உயர்த்தக்கூடும்" என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் ஒழுங்குமுறை குழு அனுமதி வழங்கியுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா தனது தடுப்பூசி விநியோக கடமைகளை மீறுகிறதா என்பது குறித்த தொடர்ச்சியான சர்ச்சையின் மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, மேலும் 29,079 பேர் பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,772,813 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7,891,184 ஆக உயர்ந்துள்ளது, 478,254 பேருக்கு இரண்டாவது டோஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்று பதிவான 28,680 புதிய தொற்றுநோயாளர்களுடன் ஒப்பிடும்போது புதிய வழக்குகளின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போடு இந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது.