ஓட்டமாவடியில் கொரோனா தொடர்பான உயர்மட்ட மாநாடு!
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களை அடுத்து பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பான உயர்மட்ட மாநாடு இன்று ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், உன்னிச்சை இராணுவ முகாம் மேஜர் அனுஷ்கா விஜயதாச, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதன், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி வர்த்தக சங்க பிரதிநிதிகள், ஓட்டமாவடி மற்றும் மீறாவோடை பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களின் நலனையும் கருத்திற் கொண்டு ஓட்டமாவடி பஸாரை அல்லது பிரதேசத்தைத் தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்துவதில்லை என்றும் வர்த்தகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால் பதினான்கு நாட்களுக்குக் குறித்த வர்த்தக நிலையத்தை மூடுவதென்றும், முககவசம் அணியாமல் திரிபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது என்றும், வர்த்தக நிலையங்களுக்குச் சிறு பிள்ளைகளை அழைத்து வருவதற்குத் தடை விதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதே வேலை ஓட்டமாவடி பகுதியில் மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டு, சீனிப்போடியார் வீதி மட்டும் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அவ்வீதி மாத்திரம் மூடப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே மூடப்பட்ட அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை 32 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.







பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam