கொரோனா நோயாளி இரத்தம் விஷமாகி மரணம்
இலங்கையில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் உயிரிழந்துள்ளார்.
இந்த மரணத்துடன் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
களுத்துறை அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான நபரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 20 ஆம் திகதி பிம்புர ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுடன் இரத்தம் விஷமாக மாறியதே இந்த மரணத்திற்குக் காரணம் எனப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் இதுவரை 39 ஆயிரத்து 231 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 30 ஆயிரத்து 568 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 8 ஆயிரத்து 478 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
