யாழில் கோவிட் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை உயர்வு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 5 பேர் கோவிட் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும், நீர்வேலியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கீரிமலையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 99 வயதுடைய பெண் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவரது சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.
மந்திகை ஆதார மருத்துவமனை கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276ஆக அதிகரித்துள்ளது.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
