சிங்கப்பூரில் அதிகரிக்கும் கோவிட் தொற்று: விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்
சிங்கப்பூரில் இந்த ஆண்டு டிசம்பர் 3 முதல் டிசம்பர் 9 வரை 56,043 கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் 32,035 ஆக இருந்ததை விட இது அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வாரத்திற்கு முன்பு நாளாந்தம் கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சராசரி நோயாளிகளின் எண்ணிக்கை 225 இலிருந்து 350 ஆக அதிகரித்துள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும் சராசரி நாளாந்தம் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) நோயாளிகளின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.
இதனால், நெரிசலான இடங்களிலும் விமான நிலையங்களிலும் முகக்கவசம் அணியுமாறு சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவின் கேரளாவிலிருந்து புதிய கோவிட் வைரஸ் பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தில் கோவிட் தொற்று
அண்மையில் கேரள மாநிலத்தில் 230 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், சீனாவில் COVID-19 நோய்த்தொற்றுகள் குறைந்த தொற்றுநோய் அளவில் இருப்பதாகவும், சீனாவில் சுவாச நோய்க்கிருமிகளின் கண்காணிப்பில் அறியப்படாத வைரஸ்கள் அல்லது பக்டீரியாக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் சீனா கூறுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |