பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றும் உயிரிழப்பும்! தடுப்பூசி விளக்கத்தோடு தமிழ்த் தாதி
பிரித்தானியாவில் இலங்கை,இந்தியா போன்ற நாட்டினைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் அடங்கியுள்ள கட்டமைப்பிற்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பு வீரியமும், உயிரிழப்புகளும் மிக வேகமாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவின் கிங்ஸ்கொலோஜ் வைத்தியசாலையில் பணிபுரியும் தமிழ் தாதியொருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் கொவிட் தொற்றினை எதிர்த்து போராடுவதற்கான மன தைரியமும், விருப்பு, வெறுப்பு தன்மையும் மிக குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றானது பல காலம் எம்மோடு இருக்கக்கூடிய கொடூரமான நோய் எனவும், இந்த நோய் வீரியத்திலிருந்தும், இறப்பு வீதத்திலிருந்தும் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதன் மூலம் 60 தொடக்கம் 92 வீதமாக கொரோனா பாதிப்பு வீரியத்தை குறைத்துக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.