இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் சிலருக்கு கொரோனா தொற்று
கொழும்பு- மேட்லேண்ட் பிளேஸ் பகுதியில் உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் சில கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் ஆட்கள் செல்வது வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் பணிப்புரியும் ஊழியர்கள் அனைவரையும் நாளைய தினம் முதல் மறு அறிவித்தல் விடுவிக்கும் வரை வீடுகளில் இருந்து பணிப்புரியுமாறு கட்டுப்பாட்டுச் சபையின் மனித வள பிரிவின் முகாமையாளர் பீ. டயஸ் மின்னஞ்சல் மூலம் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளார்.
முகாமைத்துவ பதவியை வகிக்கும் அதிகாரி மற்றும் கிரிக்கெட் நிறுவனத்துடன் நெருங்கி செயற்படும் சுகாதார திணைக்களத்தின் அதிகாரி ஆகியோருக்கு கொரோனா தொற்றி இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
