நான்கு பொலிஸாருக்கு கொரோனா தொற்று
பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் கொரோனா தொற்றாளர்கள் என கண்டறியப்பட்டதை அடுத்து களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு PCR பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேல் மாகாண எல்லையில் நேற்று காலை நடத்தப்பட்ட ரெப்பீட் என்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்றிய பாடசாலை மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து மாணவனின் தந்தைக்கும் என்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியது.
பாடசாலை மாணவனின் தந்தை பொலிஸ் அதிகாரி என்பதால், களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மாணவனின் தந்தையை தவிர மேலும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்கள் என பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam