மட்டக்களப்பு நகரில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! அந்த பகுதி முடக்கம்
மட்டக்களப்பு நகரின் மாநகரசபை பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியில் மாரடைப்பால் இறந்த 79 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதி முடக்கப்பட்டு வீதிகள் யாவும் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் சுகயீனம் காரணமாக வீட்டில் இருந்த நிலையில் நேற்று இரவு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் குறித்த நபரின் சடலத்தை அங்கிருந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதுடன், குறித்த பகுதியிலுள்ள வீதிகள் யாவும் மூடப்பட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தை பார்க்க சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam