வவுனியாவில் 20 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் 20 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (29.07) காலை வெளியாகின.
அதில், மணியர்குளம் பகுதியில் ஒருவருக்கும், மாமயிலங்குளம் பகுதியில் ஒருவருக்கும், காத்தார் சின்னக்குளம் பகுதியில் இருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் இருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் கர்ப்பவதி உட்பட இருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும்,
கற்பகபுரம் பகுதியில் ஐந்து பேருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும், ஓமந்தைப் பகுதியில் ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் ஒருவருக்கும், தேக்கவத்தைப் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் ஒருவருக்கும், ஈரட்டைப் பகுதியில் ஒருவருக்கும் என 20 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan