கொரோனா தொற்றிய யுவதி காதலனுடன் விடுதியில்
தம்புள்ளை நாவுல்ல பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரிடம் PCR பரிசோதனைகளுகான மாதிரிகளை சுகாதார அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டிருந்ததுடன் கடந்த 25 ஆம் திகதி இரவு பரிசோதனை முடிவு கிடைத்துள்ளது.
இந்த பரிசோதனை முடிவில் அந்த யுவதிக்கு கொரோனா தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் இது குறித்து சுகாதார அதிகாரிகள் தொலைபேசி மூலம் யுவதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
யுவதியை உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்க அவர் இருக்கும் இடம் பற்றி யுவதியிடம் சுகாதார அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த யுவதி கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தனது காதலனுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக அங்கு சென்ற சுகாதார அதிகாரிகள் யுவதியை விசேட அம்பியூலன்ஸ் வண்டியில் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். யுவதியுடன் விடுதியில் இருந்த காதலனை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 10 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
