கிழக்கு மாகாணத்தில் 1500ஐ கடந்தது கொரோனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக தெரியவருகிறது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காத்தான்குடி பகுதியிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் காத்தான்குடி பகுதியில் மட்டும் 20 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மட்டக்களப்பில் ஒருவரும், ஏறாவூர் பகுதியில் மூவரும், வெல்லாவெளி பகுதியில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 333ஆக அதிகரித்துள்ள அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதுடன், அடுத்தபடியாக உகன பகுதியில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் 968 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் கல்முனை பிராந்தியத்தில் மட்டும் 915 பேர் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.