பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா! மூடப்பட்ட மந்திகை வைத்தியசாலை விடுதி
யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலோலி தெற்கை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையின் 07ஆம் இலக்க விடுதி முடக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புலோலி தெற்கை சேர்ந்த நபர் ஒருவர் தொண்டை வலி மற்றும் காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
ஆண்களுக்கான விடுதியான 07ஆம் இலக்க விடுதியில் சேர்க்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
அவரிடம் பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த மந்திகை ஆதார வைத்தியசாலையின் 07ஆம் இலக்க விடுதி முடக்கப்பட்டு ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியுடனோ அல்லது வேறு எந்த கொரோனாத் தொற்று மூலத்துடனோ தொடர்புபட்டிருக்காத நிலையில் குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனால் மேலதிக தடமறியும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam