கொரோனா புள்ளிவிபரங்களில் மாற்றம் செய்யப்படுகின்றன - தேசிய சுதந்திர முன்னணி
கொரோனா தொற்று நோய் பரவல் தொடர்பான புள்ளிவிபரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இராணுவத்தின் உயர் அதிகாரி மற்றும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் இரண்டு மருத்துவ நிபுணர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதிக்கு தேவை என்றால் இந்த நபர்களை கண்டறிய முடியும். 11 ஆம் திகதி இலங்கையில் 5 ஆயிரத்து 515 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி முதல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் எனவும் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புள்ளிவிபரங்களுக்கான சாட்சியங்களை அவர் வெளியிட்டுள்ளார்.




