கோவிட் கட்டுப்பாடு கைநழுவி போகலாம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நேற்றைய தினத்தின் பின்னர் மக்கள் நடந்துக்கொள்ளும் விதம் தொடர்ந்தால், கோவிட் கட்டுப்பாடு கைநழுவி போகும் என்பது நிச்சயம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் நேற்றைய தினம், வங்கிகள், அடகு பிடிக்கும் நிலையங்கள், மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிரில் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாது நடந்துக்கொண்டதாக அந்த சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிரசாத் கொழம்பகே கூறியுள்ளார்.
இப்படியான நிலைமை ஏற்படுவதை தடுக்கும் வகையில் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் , மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கொழம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார சட்டங்களை புறந்தள்ளி விட்டு மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால், கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிக்கலான நிலைமையை உருவாக்கும் வாய்ப்புள்ளது எனவும் பிரசாத் கொழம்பகே குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri