மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட கோஃப் குழுவின் விசாரணை
புதிய விசா வழங்கல் செயல்முறை தொடர்பான சர்ச்சைக்குரிய VFS குளோபல் ஒப்பந்தம் குறித்து விசாரிப்பதற்காக பொது நிதிக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் பிரசன்னம் இன்மையால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை நாடாளுமன்ற பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா (Harsha De Silva) வெளியிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சர்ச்சைக்குரிய புதிய விசா-குடிவரவு திட்டம் தொடர்பாக மே 14 அன்று திட்டமிடப்பட்ட விசாரணையில் கலந்து கொள்வதைத் தவிர்த்ததாக டி சில்வா முன்னர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், விசாரணைக்கான புதிய திகதி ஜூன் 4ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஹர்ஷ டி சில்வா தமது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
மேலும், “நாங்கள் பல விவரங்களைக் கண்டுபிடித்துள்ளோம், இறுதிக் கூட்டத்திற்குப் பிறகு அனைத்தையும் வெளியிடுவோம். சர்ச்சைக்குரிய GBS/IVS ஒப்பற்தத்தின் பின்னணியில் உள்ள உண்மையை அம்பலப்படுத்த கோப் குழு உறுதி எடுத்துள்ளது” என்றும் டி சில்வா தெரிவித்துள்ளார்.
#COPF meeting on #VFSfiasco postponed again due to Govt officials' unavailability on May 28th. New date: June 4th. We've uncovered many details & will release everything after the final meeting. COPF is committed to exposing the truth behind the controversial GBS/IVS tender.
— Harsha de Silva (@HarshadeSilvaMP) May 25, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |