தொலைத்தொடர்புகள் திருத்தத்துக்கு ஒப்புதல்
இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான, இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டமூலம், நாடாளுமன்ற பொது நிதிக் குழுவில்(COPF)பரிசீலிக்கப்பட்டு, நாடாளுமன்ற சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பொது நிதி தொடர்பான குழு கடந்த வாரம், குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வாவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம், தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுப்பினர்கள் இந்த பரிசீலனையின்போது பங்கேற்றனர்.
சட்டமூலத்தை எதிர்த்து மனு
எனினும் இந்த யோசனை எப்போது சபையில் சமர்ப்பிக்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த மே 10ஆம் திகதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட, இந்த சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் அண்மையில் அறிவித்தார்.
இந்தநிலையில் உயர்நீதிமன்றில் தீர்;மானத்தை மதித்து தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |