கோப் குழுவின் புதிய சாதனை
கோப் குழுவின் (COPE) அண்மைக் கால விசாரணைகள் உத்தியோகபூர்வ யூடியூப் (YouTube) தளத்தின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதில் புதிய சாதனை ஒன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை காணொளியை 7 நாட்களுக்குள் 17,000 பேர் பார்வையிட்டுள்ளனர்.
பேசு பொருளான காணொளி
இதற்கு முன்னர் அதிகளவிலான பார்வையாளர்கள் பதிவாகியிருந்தது 5 மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான விசாரணையின் போதாகும்.
அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 7,500 ஆகும். 3 மாதங்களுக்கு முன்பு தேசிய சேமிப்பு வங்கி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை 6,400 பேர் பார்வையிட்டிருந்தனர்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஆகிய இருவரும் கூட்டத்திலிருந்து வெளியேறியமையும் விசெட செய்தியாக பேசப்பட்டதால் குறித்த காணொளியை அதிகம் பேர் பார்வையிட்டிருக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.