நிறைவேற்று அதிகாரத்தின் தன்னிச்சையான முடிவுகள்:இடையில் நிறுத்தப்பட்ட திட்டங்கள்
நிறைவேற்று அதிகாரத்தின் தன்னிச்சையான முடிவுகளின் அடிப்படையில் சில திட்டங்களை இடையில் நிறுத்த வேண்டியேற்பட்டதாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம்(கோபா) தெரிவித்துள்ளது.
அதிகாரிகளுக்கு அந்த தீர்மானங்கள் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது எனவும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
10 ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்ட 10 ஆண்டுக்கான உரிய பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை உருவாக்குமாறு கோபா குழு, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு இநத ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ள திட்டங்கள், அனுமதி கிடைத்தும் இடையில் நின்று போன திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலைமை மேம்படுத்த திணைக்களத்திடம் உள்ள எதிர்கால திட்டங்கள் தொடர்பாக தெரிவுக்குழுவின் கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.