ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த விசேட கூட்டம் எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நடமாடும் சேவை
இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களைத் தொடர்ந்து இரு மாவட்டங்களிலும் உள்ள காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான அறிவித்தல் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் ஊடாக கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |