உழவர் சந்தைக்கு விவசாயிகள் பொருட்களை கொண்டு வர வசதியாக பேருந்து சேவை
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு விவசாயிகள் கிராமங்களிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு வசதியாக தனியார் பேருந்துகள் அனைத்தையும் பழைய பேருந்து நிலையத்தினூடாக சேவையில் ஈடுபடுமாறு சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரி.இராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
விவசாயிகள் உள்ளூர் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு பேருந்துகளில் பொருட்களை கொண்டு வரும் போது அப்பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தினூடாக பயணிக்க வேண்டும் என அனைத்து உள்ளூர் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தமது விளைபொருட்களை நேரடியாக பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள உழவர் சந்தைக்குக் கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan