அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் இருவர் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை
இந்தியாவின் இந்தூரில் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் இருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா வெளியிட்ட கருத்துகள் 'பாதிக்கப்பட்ட தரப்பை குறை கூறுவதாக தெரிவித்து பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை சிற்றுண்டிச் சாலையொன்றுக்கு சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸ் கைது செய்தது.
இந்த சம்பவத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை "வருந்தத்தக்கது" எனக் கண்டித்தது.
பிரபலங்கள் மத்தியில் கடும் கண்டனம்
இந்தநிலையில், மாநில அமைச்சர் விஜயவர்கியா, இது அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகளுக்கான பாடம் எனக் குறிப்பிட்டதுடன், "எதிர்காலத்தில் வெளியே செல்லும்போது, வீராங்கனைகள் பாதுகாப்பு அல்லது உள்ளூர் நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்" என கருத்து தெரிவித்தார்.

வீரர்கள் தங்கள் பிரபலத்தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரின் இந்தக் கருத்தே சமூக ஊடகங்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் பல பிரபலங்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam