ஒலிம்பிக்கில் பங்கேற்ற இலங்கை வீர, வீராங்கனைகளின் சீருடை குறித்து சர்ச்சை!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கு பற்றியுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளின் சீருடை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
இம்முறை இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்ற போது அணிந்த ஆடைகளில் இலங்கை கொடி பொறிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், அமைச்சரவை இணைப் பேச்சாளரிடமும் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்கேற்ற வீர, வீராங்கனைகளின் ஆடைகளில் இலங்கையின் தேசிய கொடி இலச்சினை பொறிக்கப்பட்டிருக்காமை அவதானிக்கப்பட்டது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் பாரதூரமானது எனவும், இந்தப் பிரச்சினையை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கொடி பொறிக்கப்படாமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களைத் தவிர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டது நியாயமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதிநிதிகளின் பயணச் செலவுகளை திறைசேரி மேற்கொள்ளவில்லை எனவும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த செலவினை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
