ஜனாதிபதியின் முகநூலில் இடப்பட்ட பதிவு! சமூக ஆர்வளர்கள் கேள்வி
ஜனாதிபதி அநுர திசாநாயக்கவின் பெயரில் இயங்கும் தமிழ் சமூக ஊடக கணக்கு மூலம் தவறான பதிவுகள் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தென்னலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
அரகலய போராட்டத்தின் போது தனது வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்திற்கு முன்னாள் அமைச்சர் சீதா அரம்பேபொல இழப்பீடு பெற்றதாகக் கூறும் ஒரு குறிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிர்வகிக்கும் ஆர்வலர்கள்
எனினும், தொடர்புடைய குறிப்பு வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் அகற்றப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்தக் பதிவு ஜனாதிபதியின் சமூக வலைப்பின்னலை நிர்வகிக்கும் ஆர்வலர்களால் தவறுதலாக வெளியிடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி தரப்பில் இருந்து இது தொடர்பில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)