நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு..!

Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order
By Aanadhi Jun 04, 2026 10:34 AM GMT
Report

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் சீர்குலைக்கும் என்றும் அந்த கட்சி எச்சரித்துள்ளது.

மாநகர சபை உறுப்பினருக்கு அவதூறுப் புகைப்படம் அனுப்பிய நபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு..!

மாநகர சபை உறுப்பினருக்கு அவதூறுப் புகைப்படம் அனுப்பிய நபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு..!

மேல் நீதிமன்ற நீதியரசரின் வயது எல்லை

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த முன்மொழிவுக்கான எந்தவொரு விளக்கத்தையும் அரசாங்கம் வழங்கத் தவறியுள்ளது.

இந்த தெளிவற்ற தன்மை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதனை அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமே மாற்றியமைக்க முடியும்.

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு..! | Controversy Over Retirement Age For Judges

புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதனை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதாக அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிராக முன்னர் எடுத்த நிலைப்பாடுகளுக்கு முரணாக ஆளும் கூட்டணி தற்போது செயற்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வலியுறுத்தல்

ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தகுதியுடைய ஏனைய நீதிபதிகளின் பதவி உயர்வுகளை அநியாயமாக தாமதப்படுத்தும் என்பதுடன், மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மதிக்கக் கோரும் அரசியலமைப்பின் 28ஆவது பிரிவை மீறுவதாகவும் அமையும்.

மேலும், இந்த முன்மொழிவானது சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.

நீதித்துறையைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து நபர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த முயற்சிக்கு எதிராக தலையிட வேண்டும்.

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு..! | Controversy Over Retirement Age For Judges

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி , இந்த முன்மொழிவை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.  

சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

இதேவேளை, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் முயற்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு வருடங்களால் நீட்டிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு..! | Controversy Over Retirement Age For Judges

இது தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

வயது எல்லை இரண்டு வருங்களாக அதிகரிப்பு

இந்தத் தருணத்தில் நீதிமன்றங்களில் தற்போது சேவையாற்றி வரும் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதானது, நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு வெளிப்படையான முயற்சியாகவே பொதுமக்கள் கருதக்கூடும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலத் திட்டமிடல் எதுவுமின்றி இவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வது, அந்த நீதிமன்றங்களின் கௌரவத்திற்கும் நீதியரசர்களின் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தாம் நம்புவதாக சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய அரசாங்கம் இத்தகையதொரு நடவடிக்கையை முன்னெடுத்தால், அது எதிர்கால அரசாங்கங்களுக்கும் நீதித்துறை சார்ந்த பணிகள் தொடர்பாக, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி அரசியலமைப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

GalleryGalleryGallery

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

கண்டியில் கோர விபத்து.! பெற்றோர் கண்முன்னே பறிபோன 2 வயது சிறுமியின் உயிர்

கண்டியில் கோர விபத்து.! பெற்றோர் கண்முன்னே பறிபோன 2 வயது சிறுமியின் உயிர்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US