இலங்கையில் உயிருடன் உள்ளவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போஸ்டரினால் சர்ச்சை
வடமேல் மாகாண முன்னாள் ஆளுநர் ராஜா கொல்லூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வாரியபொல பிரதேச சபையினால் அச்சிடப்பட்ட போஸ்டரில் ஏ.ஜே. எம். முஸாமிலின் புகைப்படம் பதிவிடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
கோவிட் தொற்றுக்குள்ளாகிய ராஜா கொல்லூர் கொத்தலாவல பாதுகாப்பு பீட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொல்லூர் நேற்று காலை உயிரிழந்துள்ளார். கொல்லூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வடமேல் மாகாணம் முழுவதும் இரங்கல் பதாகை பதிவிட வாரியபொல பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் போது கொல்லூரின் புகைப்படத்திற்கு பதிலாக முன்னாள் ஆளுநரும் கொழும்பு நகரின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸாமிலின் புகைப்படம் பதிவிடப்பட்டமை சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் வாரியபொல பிரதேச சபையின் ஒரு உறுப்பினரேனும் வடமேல் மாகாண முன்னாள் ஆளுநர் ராஜா கொல்லூரின் புகைப்படத்தை பார்த்ததில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan