உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் மோதல்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஆரம்பக்கட்ட உடன்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், தொகுதிகளுக்கான உறுப்பினர்களை சமமாக தெரிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றங்களுடன் தொடர்புடைய 340 பிரிவுகளில் உள்ள 4917 ஆசனங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3229 உறுப்பினர் ஆசனங்களைக் கொண்டுள்ளது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகக் குறைவான ஆசனங்களே உள்ளன.
அந்நிலைமையால், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு சம அந்தஸ்து கிடைக்கும் வகையில், ஆசனங்களைக் கோரும் உறுப்பினர் தொகுதிகளில் போட்டியிட விருப்பமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் எதிர்காலத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
இதற்காக இன்று இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக எதிரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யானை, தாமரை மொட்டு சின்னங்களில் எந்த சின்னங்களில் போட்டியிடுவது என்பது தொடர்பில் தற்போது வரையிலும் இரண்டு தரப்பினருக்கு இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 6 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
