யாழில் பூசகர்களிடையே முரண்பாடு: பொலிஸார் நடவடிக்கை (Photos)

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Sri Lanka Police Investigation
By Theepan Jun 09, 2023 12:44 PM GMT
Report

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் தடைப்படும் அவலம் நிலவுகின்றது.

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில் இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் முன்நின்று நடத்துவதென கமல்ராஜ் குருக்கள் மற்றும் சிவதர்சக்குருக்கள் ஆகிய இரண்டு பூசர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முரண்பாடு முற்றிய நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

யாழில் பூசகர்களிடையே முரண்பாடு: பொலிஸார் நடவடிக்கை (Photos) | Controversy Among Jaffna Devasthanam Priests

கடந்த 06 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றினால் சிவதர்சக் குருக்கள் என்பவர் இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை முன்னின்று நடாத்துமாறும் ஏனைய இரு பூசகர் குடும்பத்தினரும் திருவிழாவை குழப்பக்கூடாது எனவும் கட்டளை வழங்கப்பட்டது.

எனினும் கமல்ராஐ் குருக்கள் ஆலயத்தினை பூட்டிவிட்டு அதன் திறப்பினை எடுத்துச் சென்றுள்ளார். பொலிஸார் நீ்திமன்றக் கட்டளையின் பிரகாரம் அவரிடமிருந்து திறப்பினை பெற்று உரிய பூசகரான சிவதர்ச குருக்களிடம் திறப்பினை வழங்க முயன்றபோது கமல்ராஜ் குருக்கள் திறப்போடு கொழும்பு சென்றுவிட்டதாக பொலிஸாரிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மகோற்சவம் ஆரம்பமாவதற்கு முதல் நாளான நேற்றைய தினம்(08.06.2023) 9.30 மணிவரை குறித்த பூசகர் ஆலயத் திறப்பினை கையளிக்காததால் நிலமை மோசமடைந்தது.ஆலயத்தில் முரண்பாடான நிலைமை காணப்பட்டது.

யாழில் பூசகர்களிடையே முரண்பாடு: பொலிஸார் நடவடிக்கை (Photos) | Controversy Among Jaffna Devasthanam Priests

அங்கு நின்ற பூசகர் ஆலயத்திலிருந்த பெண் ஒருவரோடு முரண்பட்டதோடு அப் பெண்ணையும் 15 வயது சிறுமி ஒருவரையும் தாக்கியுள்ளார்.

பின்னர் முரண்பாடு அதிகரித்த நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸார் விரைந்து முரண்பாட்டினை தடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த பெண் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடைப் பதிவுசெய்துள்ளதோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் 9.45 மணியளவில் கமல்ராஜ் குருக்கள் ஆலயத்தில் பிரசன்னமாகியபோதும் ஆலயத் திறப்பினை உரிய பூசகரிடம் வழங்கவில்லை.

உரிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படல்

மேலும், வாய்த்தர்கம் அதிகரித்த நிலையில் பொலிஸார் ஆலயத்தினை பூட்டிவிட்டு நாளை,இன்று நீதிமன்றில் ஒப்படைப்பதாகவும் அங்கு உரிய ஆதாரங்களை காட்டி பெற்றுக் கொள்ளுமாறும் ஆலயத் திறப்பினை எடுத்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் நடைபெற்ற போது ஆலயத்தில் வழிபடுவதற்காக வந்த சுமார் 200ற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள், தொண்டர்கள் ஆலயத்திற்குள் சென்று வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

மேலும் ஆலயச் சூழலில் நிலைமைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யாழில் பூசகர்களிடையே முரண்பாடு: பொலிஸார் நடவடிக்கை (Photos) | Controversy Among Jaffna Devasthanam Priests

இன்றையதினம்(09.06.2023) ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் இவ் அசம்பாவிதம் இடம்பெற்றமை பக்தர்களை முகம்சுழிக்க வைத்துள்ளது.

யாழ்ப்பாண இந்து ஆலயங்களில் அண்மைக்காலங்களாக உள்ளக முரண்பாடுகள் அதிகரித்துவருகின்றன.

அண்மைய நிகழ்வு ஒன்றில் ஆலயங்களில் நிலவும் உள்ளக முரண்பாடுகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரும் இதனை வெளிப்படையாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தடைப்பட்ட மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்றையதினம்(09.06.2023) காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்று வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீன்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் கருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்யுமாறும் நீதிபதியினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாம்  இணைப்பு

யாழ்.வண்ணை வீரமாகாளி அம்மன் தேவஸ்தான கொடியேற்றத்தினை இன்று மாலை 5 மணிக்கு முதல் முன்னெடுக்க  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கொடியேற்றத்தின் போது தடைசெய்வோரை கைது செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US