கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கையில் ஆரம்பமான விவாதங்கள்
இலங்கையர்கள் (Sri Lankans) நால்வர் இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் பாதுகாப்பு மட்டத்தில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இவர்கள் நால்வரும் இந்தியாவில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானை சேர்ந்த அபு என்பவரால் கையாளப்பட்டவர்கள் என்று இந்திய பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், அவர்கள் தொடர்பிலான பின்னணிகள் குறித்து இலங்கையிடமும் இந்திய பொலிஸ் பிரிவு விசாரித்துள்ளது.
இந்திய பொலிஸ்
இந்தநிலையில் அந்த நால்வரையும் வழிநடத்தினார் என்று கூறப்பட்ட ஒருவரும், இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மேலும் இருவரும் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்று இலங்கையில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் தம்மை தாமே பாதுகாப்பு தொடர்பான நிபுணர் என்று கூறிக்கொள்ளும் ரொஹான் குணரத்ன, குறித்த நால்வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தாம் கைது செய்த நால்வரை இந்திய பொலிஸ் விசாரிக்கும் முன்னரே, ரொஹான் குணரத்ன, அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என்று கூறியதை ஆங்கில ஊடக பத்தி எழுத்தாளர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
இந்திய அதிகாரிகள் விசாரிக்கும் முன்னரே ரொஹான் குணரத்ன, இந்த கருத்தை கூறுவாராக இருந்தாலும் அவரிடம் இந்திய உளவுத்துறையுடன் தனியான தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை குறித்த பத்தி எழுத்தாளர் எழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan