தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்: ஊடகவியலாளர் ஒருவருடன் தீவிர விசாரணை

Sri Lanka Police Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka Government
By Shan May 30, 2026 12:06 PM GMT
Report

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு ஊடகங்களில் வெளியானமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் மீண்டும் ஒரு மணிநேர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று(29.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை! பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க கிண்டல்

எதிர்க்கட்சிகளின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை! பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க கிண்டல்

இரண்டாவது நாளாக விசாரணை முன்னெடுப்பு

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறி, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், கடந்த 27 ஆம் திகதி அவர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்: ஊடகவியலாளர் ஒருவருடன் தீவிர விசாரணை | Controversial Voice Recording Of The Minister

எனினும், அன்றையதினம் முறைப்பாட்டாளரான தவிசாளர் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்காத காரணத்தினால், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மீண்டும் நேற்றையதினம்(29) பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த விசாரணைகள் முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றதுடன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரும் அதில் பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது, “குறித்த குரல் பதிவு எவ்வாறு உங்களுக்குக் கிடைத்தது?” , செய்தியால் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும், இனிமேல் இவ்வாறான செய்திகளை போட வேண்டாம் என்றும் , போடப்பட்ட செய்தியை இல்லாது செய்யுமாறும் பொலிஸாரிடம் தவிசாளர் கூறியிருந்தார். இவ்வாறு செய்திகள் இனி வெளிவருமாக இருந்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என பொலிஸார் இதன்போது தெரிவித்திருந்தார்.

வாட்ஸ்சப் குழுவில் கசிந்த உரையாடல்

இதற்கு பதிலளித்த ஊடகவியலாளர், “இது தனிநபர்கள் சார்ந்த உரையாடல் அல்ல. பிரதேச சபையின் முன்னாள் செயலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான உரையாடல். மேலும் குறித்த தவிசாளரே இந்த உரையாடலை வாட்ஸ்சப் குழுவொன்றிலும் பகிர்ந்திருந்தார்” என்றார்.

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்: ஊடகவியலாளர் ஒருவருடன் தீவிர விசாரணை | Controversial Voice Recording Of The Minister

இவ்வாறான விவகாரங்களை பொலிஸார் நேரடியாக நீதிமன்றில் முற்படுத்த முடியாது. எனவே, தேவையெனில் சிவில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யுமாறு தவிசாளருக்கு அறிவுறுத்தியதையடுத்து விசாரணைகள் நிறைவுக்கு வந்தன.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தவிசாளரும், சபை உறுப்பினர் ஒருவரும் இடையே இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொதுமக்களுக்கு உண்மைத்தன்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது இவ்வாறான விசாரணைகள் மற்றும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவது, ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என ஊடக வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

நாட்டில் சுமார் 100 பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு.. சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நாட்டில் சுமார் 100 பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு.. சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

2026 இல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 5.4 வீத சரிவு

2026 இல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 5.4 வீத சரிவு



4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US