பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய நாளமில்லாச் சுரப்பியல் ஆலோசகர் வைத்தியர் மணில்கா சுமனதிலக்க, பண்டிகைக் காலங்களில் இனிப்புகளை உண்பதில் கவனமாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
புத்தாண்டு உணவுப் பொருட்கள்
பால் சாதம், 'கேவும்', 'கோகிஸ்' மற்றும் 'அல்வா' போன்ற பாரம்பரிய புத்தாண்டு உணவுப் பொருட்கள் கொண்டாட்டங்களின் இன்றியமையாத பகுதியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், ஒரு நேரத்தில் ஒரு வகை இனிப்பை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
பால் தேநீர் குடிப்பதற்குப் பதிலாக, சர்க்கரை சேர்க்காத சாதாரண தேநீரைக் குடியுங்கள் என்று அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
பண்டிகைக் காலத்தில் இதுபோன்ற எளிய மாற்றங்கள், இரத்தச் சர்க்கரை அளவை ஓரளவிற்கு சீராகப் பராமரிக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.