ஜப்பான் நிறுவனத்தால் இரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்: யாழ்.மாநகர சபை வெளியிட்டுள்ள தகவல்

Jaffna Sri Lankan political crisis Japan Sri Lanka Relationship Japan
By Kajinthan Aug 31, 2022 01:45 PM GMT
Report

ஜப்பான் நிறுவனத்தின் வாகனத்தினை யாழ்.மாநகர சபைக்கு கொண்டுவருவதில் தவறு இழைத்தது மத்திய அரசாங்கம் தான் என யாழ்.மாநகர உறுப்பினர் வ.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபைக்கு வாகனம் கொள்வனவு செய்வதில் எற்பட்ட தவறுகள் தொடர்பான ஊடக சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நேற்று(30) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“2019 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது முன்னாள் மேயர் ஆனோல்ட், யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், யாழ்.மாநகர நிர்வாகமாக இருக்கட்டும் தங்களுடைய சக்திகளை மீறி ஜப்பான் நிறுவனத்தின் வாகனத்தினை கொண்டுவருவதில் எவ்வாறு மேற்கொண்டார்கள்.

இந்த விடயத்தில் யாழ்.மாநகர சபை தவறு இழைத்தது என்று கூற முடியாது. இதில் தவறு இழைத்தது மத்திய அரசாங்கம் தான்.

மத்திய அரசாங்கத்தின் செயற்பாடு

ஜப்பான் நிறுவனத்தால் இரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்: யாழ்.மாநகர சபை வெளியிட்டுள்ள தகவல் | Contract Canceled By Japanese Company Jaffna

யாழ்.மாநகர சபை கூறிய விடையங்களை மத்திய அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை.

யாழ். மாநகர சபையின் அசமந்தபோக்கு என்ற ரீதியாக கருத்துக்களை வெளியிடாமல், எல்லோரும் ஒன்று பட்டு மத்திய அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்திய அப்பட்டமான சதிசெயல் ரீதியாக ஜப்பானின் அரசாங்கத்தினால் யாழ். மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. என்ற உண்மையினை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ஜப்பான் அரசாங்கத்தின் ஒப்பந்தம்

ஜப்பான் நிறுவனத்தால் இரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்: யாழ்.மாநகர சபை வெளியிட்டுள்ள தகவல் | Contract Canceled By Japanese Company Jaffna

வாகனத்தினை கொள்வனவு செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் ஒப்பந்தம் கைச்சாத்து கையிடப்பட்டு 2019ஆண்டு 05 மாதகால பகுதிக்குள் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குள் யாழ்.மாநகர சபையின் வங்கி கணக்கு இலக்கத்தின் படி 83.432 டொலர்கள் வைப்பில் இடப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் படி 14.03 மில்லியன் ரூபாக்கள் வைப்பில் இடப்பட்டுள்ளது. அதனை தற்போது 2022 ஆம் ஆண்டில் அந்த நிதியினை மீளப்பெறுதற்காக நடவடிக்கையினை மத்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ளனர்” என கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

“ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாநகர சபைக்கு தின்ம கழிவகற்ற ஜப்பான் நாட்டில் பாவிக்கப்பட்ட நவீன ரக கழிவகற்றல் வாகனத்தை வழங்க கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி அப்போதைய யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

அந்த வாகனத்தை ஜப்பான் நாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான செலவு , வரிகள் மற்றும் மாநகர சபைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான செல்வது என 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணம் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.

அதனை அடுத்து வாகனத்தினை இலங்கைக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசின் பல்வேறு தரப்புகளுடனும் பேசி எந்த பயனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 12ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு கடிதம் மூலம் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி கோரினோம்.

அவர்கள் எமக்கான அனுமதியை தரவில்லை மீண்டும் 18ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கு உரிய படிமுறைகள் அடிப்படையில் இறக்குமதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம்.

நீண்ட இழுபறியில் பின்னர் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

அது மூன்று மாத கால பகுதிக்கே செல்லுபடியாகும். அதற்கு இறக்குவதற்கான மற்றைய அனுமதிகள் கிடைக்க தாமதமானதால் , இறக்குமதி சான்றிதழ் 2020ஆம் ஆண்டு 2மாதம் 17ஆம் திகதியுடன் காலாவதியானது.

திறைசேரிக்கு கையளிக்கப்பட்ட பணம் 

அதன் காலாவதி திகதியை நீடித்து தருமாறு கோரிய போது அதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டு சபை மறுத்தது. பின்னர் திறைசேரிக்கு கடிதம் அனுப்பினோம். மாநகர சபைக்கு வாகனம் கொண்டு வருவதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுப்பிய பணத்தினை திறைசேரிக்கு பாரப்படுத்துறோம். நீங்கள் அந்த பணத்தினை வைத்து எமக்கு வாகனத்தினை இறக்கி தாருங்கள் என கோரினோம்.

அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பணமும் வரவில்லை. பிறகு அமைச்சரவை பாத்திரம் தாக்கல் செய்வதன் ஊடாக முயற்சிப்போம் என அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதனை தாக்கல் செய்தோம்.பயனில்லை இறுதியாக யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தன்னை சந்திக்கும் இராஜ தந்திரிகளிடம் வாகனத்தினை இறக்க முடியாத நிலைமை குறித்து எடுத்து கூறி இராஜதந்திர ரீதியாக முயற்சிகளையும் முன்னெடுத்தோம். அதுவும் பயனற்று போனது.

இந்நிலையிலையே , ஜப்பான் அரசாங்கம் தமது திட்டமானது மூன்று கால பகுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டியது. மூன்று வருடங்கள் கடந்தும் நிறைவேற்றப்படவில்லை.

யாழ்.மாநகர சபையும் தன் சக்திக்கு மேலாக பல முயற்சிகளை எடுத்தமையை நாம் அறிவோம். நாமும் மத்திய அரசுடன் இது தொடர்பில் பேச்சுக்களை நடாத்தினோம். எந்த பயனும் இல்லை எனவே ஒப்பந்தத்தை முடிவுறுத்துகிறோம்.

மாநகர சபைக்கு வழங்கிய 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணத்தை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்கள்.

இந்த விடயத்தில் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட்டையோ , தற்போதைய முதல்வர் மணிவண்ணனையோ அல்லது மாநகர நிர்வாகத்தையோ குறை கூறவோ , குற்றம் சாட்டவோ முடியாது.

இது முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் முட்டுக்கட்டையால் ஏற்பட்டது. தமது தலையீடு இன்றி வெளிநாடுகளோ , வெளிநாட்டில் வசிப்போரோ எவரும் மாகாணங்களுக்கு நேரடியாக உதவ விடக்கூடாது எனும் குறுகிய சிந்தனையில் செயற்படுகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் தடைகளை நீக்கி , அவர்களை இலங்கையில் வந்து முதலீடு செய்யுமாறு அரசாங்கம் கோருகின்றதை பார்க்கும் போது நகைப்பாக உள்ளது.

ஏனெனில் ஜப்பான் நாட்டினால் வழங்கப்பட்ட உதவிகள் தமிழர் தேசத்திற்கு கிடைக்க கூடாது என சிந்திப்பவர்கள் எவ்வாறு புலம் பெயர் தேசத்தவர்கள் தமிழர் தேசத்தில் முதலீடு செய்ய அனுமதிப்பார்கள் ?

யாழ்.மாநகர முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பல்வேறு தரப்புக்களை சந்தித்த போது , பலரும் தமிழர் தேசத்திற்கு உதவ , தேசத்தில் முதலீடு செய்ய விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் அரசாங்கம் தமிழர் தேசத்தில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வோ , உதவிகளை செய்யவோ குறுகிய அரசியல் சிந்தனையுடன் தடைகளை ஏற்படுத்துவார்களாக இருந்தால் , நாம் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

மேலதிக செய்தி:தீபன்

இலங்கை நிதியமைச்சின் நடவடிக்கை காரணமாக யாழ் மாநகர சபையுடனான உடன்படிக்கையை இரத்து செய்த ஜப்பான்


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US