விமான நிலையத்தில் சிக்கிய பல கோடி ரூபாய் பெறுமதியான கடத்தல் பொருட்கள்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இருவர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் இன்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சந்தேகநபர்களையும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது கொண்டுவரப்பட்ட பொருட்களில் வெளிநாட்டு மதுபானங்கள், பல்வேறு வகையான சிகரெட்டுகள், கிரீம்கள், வாகன பாகங்கள் மற்றும் அறுவை சிகிச்சை கத்தரிக்கோல் ஆகியவை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
சந்தேகநபர்கள் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள முக்கிய பொலிஸ் அதிகாரி - கிளப் வசந்த படுகொலையில் திடுக்கிடும் தகவல்கள்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
