மன்னாரில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தொடர்ச்சியாக டீசலுக்கு தட்டுப்பாடு (PHOTOS)
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் நிலையங்களில் டீசல் இன்மையால் தனியார் பேருந்து உரிமையாளர்கள், டிப்பர் சாரதிகள் உட்பட பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பானது மிகவும் குறைவான நிலையில் காணப்படுவதுடன் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாமல் காணப்படுகிறது.
இதன் காரணமாக டிப்பர் வாகனங்கள் மற்றும் மீன் ஏற்றுமதி வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் காணப்படுகின்றது.
டீசல் இன்மையால் தூர இடங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் ,சாரதிகள் பாரிய சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதே நேரம் பல இடங்களில் டீசல் பதுக்கல் இடம் பெறுவதுடன் தொடர்ச்சியாக டீசல் பற்றாக்குறை நிலவும் என்பதால் வாகன உரிமையாளர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரல்,கான்களுடனும் டீசலுக்கு காத்திருக்கின்றனர்.









தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
