மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை: வெள்ளத்தில் மூழ்கிய தாழ்நில பிரதேசங்கள்(Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரம் மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுவதுடன் அரச திணைக்களங்களும் வெள்ளத்தினால் மூழ்கிக் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்ற வளாகம் மற்றும் களங்சியசாலை என்பன வெள்ளத்தினால் ழுழ்கி காணப்படுகின்றது.
நீதவான் ஓய்வு அறையிலிருந்து நீதி மன்றத்திற்குச் செல்லும் வழி நீரினால் முற்றாக மூழ்கி காணப்படுவதுடன் நீதி மன்றத்திற்குச் செல்ல முடியாதளவுக்கு வெள்ள நீர் நிறைந்து காணப்படுகின்றது.
இதனால் நீதவான் சட்டத்தரணிகள் நீதிமன்ற அலுவலர்கள் பொலிஸார் மற்றும் பொது மக்கள் அனைவரும் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாகச் சட்டத்தரணிகளும் நீதி மன்ற பதிவாளரும் தெரிவித்தார்.
வாழைச்சேனை நீதி மன்றத்திற்கு புதிய கட்டடம் ஒன்று அமைப்பதற்காக நீதி
அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்த வேலைகள் ஆரம்பிக்கப்படவிருந்த
வேளையில் அமையவுள்ள இடம் தொடர்பாக அரசியல் தலையீடு காரணமாக ஒப்பந்த வேளைகள்
நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் நீதவான் உட்பட அங்கு கடமை புரியும் அனைவரும்
சிறு மழை பெய்தாலும் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் சட்டத்தரணிகள்
தெரிவித்தனர்.






அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
