ரஷ்யாவில் பணியாற்றும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் குறித்து தொடர் விசாரணை
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முனைகளில் பணியாற்றும் முன்னாள் இராணுவத்தினர் தொடர்பாக தொடர்ச்சியாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
தற்போதைய நிலையில் உக்ரைன் போர் முனையில் 60 பேரளவான முன்னாள் இராணுவத்தினரும், ரஷ்யப் போர் முனையில் 100 பேர் அளவிலான முன்னாள் இராணுவத்தினரும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் தொடர்பு விபரங்கள்
உக்ரைன் போர் முனையில் பணியாற்றும் இலங்கை இராணுவ சிப்பாய்களில் 15 பேர் உரிய முறையில் விடுப்பு அல்லது விலகல் கடிதத்தை சமர்ப்பிக்காது இராணுவத்தில் இருந்து தப்பியோடியே தற்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இராணுவத்தின் பொதுமன்னிப்பின் கீழ் தற்போது அவர்கள் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர்முனைகளில் பணியாற்றும் இராணுவத்தினர் குறித்த விபரங்கள், அவர்களின் தொடர்பு விபரங்கள், தற்போதைய நிலைமை என்பன தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் விபரங்களை சேகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
