ஒலுவில் மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டமையால் தொடர் கடலரிப்பு : நிந்தவூர் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு(Photo)

Ampara Fishing Sri Lanka Sri Lanka Fisherman
By Farook Sihan Aug 10, 2022 07:39 AM GMT
Report

அண்மையில் மீண்டும் திறக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினால் நிந்தவூர் பிரதேசத்தில்  கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அதனை மூடும் பட்சத்தில் தொடர் கடலரிப்பை தடுக்க முடியும் என பொது மக்களும் கடற்தொழிலாளர்களும் விசனம் தெரிவித்துள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் கடற்தொழிலாளர்கள் மேலும் தெரிவித்ததாவது, 

’’தொடர் கடலரிப்பின் காரணமாக கடற்தொழிலாளர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தங்களின் மீன்பிடி சம்பந்தமான விடயங்களை கலந்தாலோசித்துக் கொள்வதற்கும், அவைகளை சிறந்த முறையில் நிர்வகித்துக் கொள்வதற்கும் பல தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டு தற்பொழுது நடு வீதிக்கு வரும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டமையால் தொடர் கடலரிப்பு : நிந்தவூர் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு(Photo) | Continued Inundation Nindavoor Ishermen Affected

தொடர் கடலரிப்பு

மேலும் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினை  உடனடியாக மூடும் பட்சத்தில் தொடர் கடலரிப்பை தடுக்க முடியும்.

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் தொடர் கடலரிப்பின் மூலமாக பல பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்த போதும் அது அரசியல்வாதிகள் மற்றும் அரச அலுவலகங்கள் மூலமாக சிறிது சிறிதாகவே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. இவ்வாறு இருக்கும் நிலையில், நிந்தவூர் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள கடற்தொழிலாளர்களுக்கு சொந்தமான கடற்தொழிலாளர் சங்கக் கட்டிடம் தொடர் கடலரிப்புக் காரணமாக முழுமையாக கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கட்டிடமானது கடற்தொழிலாளர் தங்களது கடற்தொழிலாளர் சங்க செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததுடன் அதன் பிறகு நிந்தவூர் ஒன்பதாம் பிரிவு சன சமூகநிலைய கட்டிடமாகவும் இயங்கி வந்துள்ளது.

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டமையால் தொடர் கடலரிப்பு : நிந்தவூர் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு(Photo) | Continued Inundation Nindavoor Ishermen Affected

கடலரிப்பால் ஏற்பட்ட பாதிப்புக்கள்

இதில் கடற்தொழிலாளர்களின் கூட்டங்கள், வேறு சங்கங்களின் கூட்டங்கள் மற்றும் இதர நிகழ்வுகள் என்பன நாள்தோறும் நடைபெற்று வந்ததுடன் இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் இப்பகுதியில் உள்ள கடற்தொழிலாளர்களின் மீன்பிடி உபகரணங்கள் என்பன பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் கட்டிடத்தின் ஒரு பகுதி கடலரிப்பின் காரணமாக கடலால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தது.ஆனால் இன்னும் மீதமாக இருந்த இரண்டு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி முழுமையாக கடலரிப்பினால் தற்போது சேதமடைந்துள்ளது.

இருந்தபோதும் கடந்த காலத்தில் இந்த கட்டிடம் அமைந்துள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பைத் தடுப்பதற்காக கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் தற்காலிகமாக மண்மூடைகள் நிரப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தாலும் கடல் அலைகளுக்கு அது தாக்குப்பிடிக்க முடியாமல் அள்ளுண்டுள்ளது.

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டமையால் தொடர் கடலரிப்பு : நிந்தவூர் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு(Photo) | Continued Inundation Nindavoor Ishermen Affected

ஆனால் இந்த பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தை நிரந்தரமாக பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் நிந்தவூர் பிரதேச செயலகமோ அல்லது கரையோர பாதுகாப்பு திணைக்களமோ அல்லது இப்பிரதேச அரசியல்வாதிகளோ எடுக்கவில்லை 

ஒலுவில் துறைமுகம் 

இவ்வாறான நிலை தொடர்ந்து செல்லுமானால் கடைசியில் கடற்கரை வீதியினூடாக பயணம் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு மீள திறக்கப்பட்ட பின்னர் நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படுகின்ற அதிகமான கரையோரப் பிரதேசங்கள் கடல் அலையினால் காவு கொள்ளப்பட்டு அந்த நிலங்கள் இருந்த அடையாளம் தெரியாமல் செல்கின்றது.

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டமையால் தொடர் கடலரிப்பு : நிந்தவூர் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு(Photo) | Continued Inundation Nindavoor Ishermen Affected

இதிலே இப்பிரதேச மக்களின் தென்னந்தோப்புகள்  கடற்தொழிலாளர்களின் மீனவ வாடிகள் என இவைகள் நீண்டு கொண்டே செல்வது தொடர்கதையாகின்றது.

எனவே, நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் இருக்கும் வளங்களையாவது பாதுகாப்பதற்கு இவர்கள் அனைவரும் முன்வர வேண்டும்’’ என மக்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US