கிளிநொச்சியில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்(Video)
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசதத்தில் தொடரும் காட்டு யானை தாக்குதலால் பெரும் அழிவுகளை எதிர்க்கொள்வதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை- புளியம் பொக்கனை மற்றும் வண்ணத்தியாறு பகுதியில் தோட்டச் செய்கை மற்றும் தென்னை செய்கை என்பவற்றை காட்டு யானைகள் அழித்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கவலை
தோட்ட பயிர் செய்கை மற்றும் தென்னைச் செய்கை என்பவற்றை முற்று முழுதாக அழித்து வரும் யானைகளில் இருந்து எம்மையும் எமது வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதற்கு எவரும் முன்வரவில்லை எனவும் வனஜீவராசிகள் தினைக்களத்தினருக்கு தெரிவித்தபோதிலும் எந்த பயனுமற்றுபோயுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வண்ணாத்தியாறு பகுதியில் ஒன்றரை ஏக்கர் அளவில் தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்து. மூன்று நான்கு வருடம் கடந்த நிலையில் உள்ள 22தென்னை மரங்களை நேற்றைய தினம் (13.03.2023) நள்ளிரவு1.30 மணியளவில் யானைகள் முற்று முழுதாக அழித்ததுடன் சோளப் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.





