சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம் : அரசாங்கத்தை கடுமையாக சாடும் முஜிபுர்
சர்ச்சைக்குரிய 309 சிவப்பு முத்திரை கொண்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆழமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முக்கியமான கேள்விகளுக்கு, அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
விடுவிப்பில் அரசியல் தலையீடு
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்துக்களை வெளியிட்ட அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு நடத்திய விசாரணையின் நோக்கம் மிகவும் குறுகியது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொள்கலன்கள் நிலையான நடைமுறைகளுக்கு வெளியே விடுவிக்கப்பட்டதா? என்பதைத் தீர்மானிப்பதில் மட்டுமே, குறித்த குழுவின் பணி இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொள்கலன் விடுவிப்பில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதைக் கண்டறியவும், கொள்கலன்களுக்குள் உள்ள சரக்குகளின் தன்மையைத் தெளிவுபடுத்தவும் வேண்டும்.
அத்துடன் இந்த கொள்கலன்கள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டதா? என்பதையும், அவற்றை விடுவிக்க எந்த அரசியல் பிரமுகர் உதவி செய்தார்? என்பதையும் நிறுவுவது மிக முக்கியம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |