சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு விவகாரம் : தயாசிறியின் கருத்துக்கு பிமல் பதிலடி
கொள்கலன் விடுவிப்பில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவ்வாறு விடுவிக்க தனக்கு அதிகாரமும் இல்லையென சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தயாசிறி ஜயசேகர அமைச்சர் பிமல் ரத்நாயக்க கொள்கலன் விடுவிப்பில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து பேசும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவரது ஆயுதங்கள்
தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியினர் பொய் கூறுகின்றனர்.
கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் சாட்சிகள் இருந்தால் நீதிமன்றம் சென்று நான் குற்றவாளியென்று ஒப்புவிக்கவும்.
கொள்கலன் விடுவிப்பில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
முதலில் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் அனைத்தும் மேல் மாகாண ஆளுநருடையது என்றனர்.அது பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது நான் முழு மூச்சாகச் செயற்பட்டதாக தெரிவிக்கின்றனர். அவ்வாறானால் பொலிஸ் நிலையம் சென்ற வழக்குப் பதிவு செய்து என்னை குற்றவாளியாக்கலாம்.
இவர்கள் இந்த சபையில் பொய்யே கூறுகின்றனர். நீங்கள் குறிப்பிடுவது உண்மை என்றால் அதற்கான சாட்சியங்களை திரட்டி ஒப்புவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
